| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| ஜேர்மன் நாட்டை சேர்ந்த மலையேரும் குழுவினர் சுவிஸ்சில் மரணம் |
| [ புதன்கிழமை, 04 யூலை 2012, 01:51.18 பி.ப GMT ] |
சுவிஸ் மாநிலத்தில் வலாய்ஸ் நகரில் 4010 மீட்டர் உயரமுள்ள லாகின்ஹான் மலையில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரைக்கொண்ட குழுவினர் மலையிலிருந்து இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்து உயிரழந்துள்ளனர்.ஆறு பேரைக் கொண்ட மலையேறும் குழு செவ்வாய் கிழமையன்று காலை மலையேறத் தொடங்கியது. இதில் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் தன் பயணத்தை நிறுத்திவிட்டார். மற்றவர்கள் திட்டமிட்டபடி மழையேறினர்.
கீழே இறங்கும்போது ஒருவரை ஒருவர் இணைத்து கயிறால் கட்டப்பட்டிருந்தனர். ஒருவர் கால் வழுக்கி கீழே விழ மற்றவர்களுடன் அவரோடு சேர்ந்து கீழே விழுந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. உண்மையான காரணம் என்னவென்று முழு சோதனைகளும் முடிந்த பின்பே தெரியவரும்.
பனியாற்றின் அருகில் ஐவரது உடல்களும் மீட்புப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. உடனே அவற்றை ஹெலிகப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். விரைவில் மருத்துவ சோதனைகள் முடிந்துவிடும் என்று நிறுவனத்திற்கு காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்த பின்பு தான் இவர்கள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகும். மீட்புப்படையின் தலைவர் ஜேர்மனியின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஒருவர் நழுவியதால் அனைவரும் அவரைத் தொடர்ந்து கீழே விழுந்திருக்கலாம் அல்லது பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
மூடுபனி நிறைந்திருப்பதால் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது என்றார். கடந்த 2011ம் ஆண்டில் வெளிவந்த அறிக்கையின் படி 2005 முதல் 2009 ஆண்டுக்குள் ஆண்டொன்றுக்கு முப்பதுபேர் மலைப்பயணத்தில் விபத்துக்குள்ளாகி மரணமடைவதாகவும் இவர்களின் பாதிப்பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|