| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| சுவிஸ் ஆராய்ச்சியாளர்களின் புதிய அணுக்கூறு கண்டுபிடிப்பு |
| [ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:17.22 பி.ப GMT ] |
செர்ன் ஆராய்ச்சி மையம் புதிய துணை அணுக்கூறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதுவே ஹிக்ஸ் போசன் எனப்படும் அணுக்கூறாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இத்தகவலை ஜெனீவாவில் நடந்த ஐரோப்பிய அணுவியல் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு ஒன்றில் செர்னின் பொது இயக்குநர் ரோல்ஃப் ஹியுயர் தெரிவித்தார்.
இப்போது நாங்கள் ஒரு புதிய அணுக்கூறை கண்டுபிடித்திருக்கிறோம். இது ஒரு போசோனாக இருக்கலாம் என்று கருதுகிறோம். இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் கனமான போசோனாகும்.
இந்த போசோன் உறுதியாகவும், திடமாகவும் இருக்கின்றது என்று ஜோ இன்காண்டெலா என்பவர் தெரிவித்தார். இவர் ஹிக்ஸை ஆராயும் இரண்டு குழுக்களில் ஒன்றிற்கு செய்தித் தொடர்பாளராக விளங்குகிறார்.
இயற்பியல் விஞ்ஞானிகள் அணுக்கூறுகளை ஒளி வேகத்தில் சிதைக்கின்றனர். இதனால் அணுவில் உள்ள புரோட்டான்கள் சக்தியுடன் மோதி நொறுங்குகின்றன. இந்த ஆராய்ச்சிகள் உலகத் தோற்றத்தின் போது நடைபெற்ற பெருவெடிப்பின் தன்மையை அறிய உதவுகின்றன.
இந்த ஆராய்ச்சியை 2010ம் ஆண்டு முதல் ஜெனீவாவில் பூமிக்குக் கீழே LHC என்று அழைக்கப்படும் சோதனையை Large Hadrow Collider என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையால் கிடைக்கும் ஏராளமாகத் தகவல்களைக் கொண்டு, ஹிக்ஸ் போசோன் என்ற அணுக்கூறின் தன்மையை அறிய முனைகின்றனர்.
ஹிக்ஸைத் தேடியறியும் முயற்சியில் இந்த அணுக்கூறை நொறுக்கும் சோதனைகள் மும்மடங்காகிவிட்டன. இந்த அணுக்கூறு, இறைமை அணுக்கூறு என்றும் அழைக்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|