| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிஸ் மூன்று தொழில்களில் புதிய சாதனை |
| [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 08:01.00 மு.ப GMT ] |
இரசாயண உரம், மருத்து உற்பத்தி மற்றும் கடிகார தயாரிப்பு போன்ற தொழில்களில் 2012ம் ஆண்டில் சுவிஸ் புதிய சாதனை படைத்துள்ளதாக EZV என்ற கூட்டரசின் சுங்க நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.சர்வதேச அளவில் பொருளாதாரம் சீர்குலைந்து இருந்தாலும் சுவிட்சர்லாந்தின் மட்டும் 24.4 பில்லியன் ஃபிராங்க் அளவிற்கு வியாபாரம் கூடுதலாக நடந்துள்ளது.
சுவிஸ்ஸின் ஏற்றுமதியும், இறக்குமதியும் 2012ல் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளதனால் 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு 860 பில்லியன் ஃபிராங்க் கூடுதலாக வியாபாரம் விற்பனையாகி உள்ளது.
கடிகாரம், மருந்து, மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதியில் 2% அதிகரித்துள்ளது.
சுவிஸ் கடிகாரத் தொழிற்சாலையின் ஏற்றுமதி 11% மாகவும், இரசாயண உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி 2012ம் ஆண்டு 5.8% கூடுதலாகவும் மேலும் உணவு, குளிர்பானம் மற்றும் புகையிலைப் பொருட்களின் ஏற்றுமதி 3.4% மாகவும் உயர்ந்துள்ளது.
ஐரோப்பா பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் கனடா (9%), அமெரிக்கா (12%), இலத்தீன் அமெரிக்கா(10%) போன்ற நாடுகளுக்கு சுவிஸ் ஏற்றுமதி பொருட்கள் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியா(10%), சீனா(12%) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி குறைவாகவே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|