சமூக செய்தி
சுவிஸ் ரயில் பெட்டி நிறுவனத்தில் ஆட்குறைப்பு
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 09:06.21 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள BLS கார்கோ(Cargo) எனப்படும் தனியார் நிறுவனம் தொடர்வண்டிப் பெட்டிகளை தயாரித்து சரக்கு ரயில் போக்குவரத்தை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது ஜேர்மனியின் டொய்ஷ் பான் ஷெங்கர்(Schenker) நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதால் தனது பணியாட்களில் 70 முதல் 80 பேர் வரை பணிநீக்கம் செய்துள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் கோட் ஹார்டு(Gotthard) குகைப்பாதையில் ரயில் போக்குவரத்து அமைப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டது.

எதிர்வரும் 2014ம் ஆண்டு முதல் இந்த BLS கார்கோ நிறுவனம் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து ரயில்களை இந்தக் குகைப் பாதையில் அனுப்பப் போவதால் 60 எஞ்சின் ஓட்டுநர்களுக்கு வேலையில்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தை நடத்தி வந்த BLS கார்கோ கடந்த 2012ம் ஆண்டில் 1.85 மில்லியன் ஃபிராங்க் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதற்கு காரணம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், யூரோவுக்கு நிகரான ஃபிராங்கின் மதிப்பு நிலையாக இருப்பதாலும் இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் எல்லையோர ரயில் போக்குவரத்துக்கு ஜேர்மனியின் ஷெங்கர் ரயில் நிறுவனத்துடன் இணைந்து ரயில்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

BLS AG என்ற போக்குவரத்து நிறுவனம் சுவிட்சர்லாந்தின் மத்தியப்பகுதியில் பயணிகள் ரயில், பேருந்து, படகுப் போக்குவரத்து ஆகியவற்றை நடத்தி வருகின்றது.

இந்த நிறுவனத்தின் ஒரு பிரிவாக BLS கார்கோ செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சர்ச்சையில் சுவிஸ் மருத்துவர்
சுவிசில் களைகட்டும் வைன் திருவிழா
இளைஞரை கொலை செய்த பொலிஸ்: கிளம்பியது சர்ச்சை
12 வயது சிறுமி போல் நாடகமாடிய 57 வயது தாத்தா
அசத்தலான ஓவியங்களை படைத்த இளம்பெண்
பீட்சா விற்றது குற்றமா? விற்பனையாளருக்கு வந்த எதிர்ப்பு
பார்வையாளர்களை மிரளவைக்கும் கண்காட்சி
கொண்டாட்டத்தில் களைகட்டிய விபச்சார விடுதி
சுவிசில் தந்தைகளான ஓரினச்சேர்க்கை ஆண்கள்
சிறுவனின் விளையாட்டு விபரீதமானது
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா அருணாசலம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். எழுவைதீவு
பிரசுரித்த திகதி: 28 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விமான நிலையத்தை கதிகலங்க வைத்த பயணி
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 07:17.26 மு.ப ] []
சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணி ஒருவர் தவறான நுழைவு வாயிலை பயன்படுத்தி நுழைந்து போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
மூதாட்டியிடம் வைரிசையை காட்டிய பலே திருடர்கள்
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 10:37.53 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவரை தாக்கிய இரண்டு திருடர்கள் அவரிடம் இருந்து கடிகாரத்தை திருடி சென்றுள்ளனர். [மேலும்]
பெண் தோழியுடன் சில்மிஷம்: திடீர் பல்டி அடித்த சுவிஸ் எம்.பி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 05:46.53 மு.ப ] []
சுவிசில் பணிநேரத்தில் பெண் தோழியுடன் சில்மிஷம் செய்த எம்.பி தற்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். [மேலும்]
ஜெனிவா நதியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 10:28.24 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நதியில் மூழ்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
வேலை பார்க்க அஞ்சும் சுவிஸ் மக்கள்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 07:05.43 மு.ப ]
சுவிசில் வேலைக்கு செல்லும் மக்கள் உடல் ஆரோக்கியம் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]