| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| பணக்காரர்களை நாட்டை விட்டுத் துரத்தும் சொத்துவரி |
| [ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 12:52.00 பி.ப GMT ] |
ஃபிராங்கோய்ஸ் ஹோலாண்ட்(Francois Hollande) ஜனாதிபதியானால் பிரெஞ்சு பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர் என்று சுவிஸ் வழக்கறிஞரும் வரி நிபுணருமான பிலிப் பெனல் ஏப்ரல் மாதம் கூறியது நடைபெறும் காலம் வந்துவிட்டது.இவர் இந்த எச்சரிக்கையை விடுத்த இரண்டு மாதத்திற்குள், பணக்காரர்கள் பிரான்சை விட்டு வெளியேறுவதற்கான நிர்ப்பந்தங்கள் கட்டாயம் உருவாகி வரும் இந்த வேலையில், ஹோலாண்ட் வரும் வாரங்களில் சொத்து வரி உயர்த்துவது குறித்து அறிவிக்கப்போகிறார்.
வழக்கறிஞர் கெனெல் வரி உயர்வு குறித்து பிரெஞ்சுப் பணக்காரர்கள் தன்னிடம் ஆலோசனை கேட்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார். பாரிஸ் வழக்கறிஞரான எரிக் கிண்ட்டெரும் கெனெலின் கருத்தை உறுதி செய்தார்.
தன்னுடைய பணக்கார வாடிக்கையாளர்கள் கவலையோடிருப்பதாகவும் சொத்தை எடுத்துக்கொண்டு பிரான்சை விட்டு வெளியேறுவது எப்படி என்று தன்னிடம் ஆலோசனை கேட்பதாகக் கூறினார்.
இன்னொரு பிரெஞ்சு வழக்கறிஞரான பியர் டிடியூ, உடனடியாக பணக்காரர்கள் கூட்டம் கூட்டமாக பிரான்ஸை விட்டு வெளியேறப் போவதில்லை என்றாலும் வரியிலிருந்து தப்பிக்க வழி தேடுவது உண்மை என்றார்.
கடந்த வருடம், முன்னாள் ஜனாதிபதி சர்கோசி வரிக்கான சொத்து மதிப்பை 720,000 யூரோவிலிருந்து 1.3 மில்லியனாக உயர்த்தினார்.
வரி விகிதத்தை 0.25 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதம் ஆக்கினார். ஆனால் ஹோலாண்டு இதனை 1.8 % ஆக்கப் போகிறார். எனவே வரியிலிருந்து தப்பிக்க பணக்காரர்கள் ஆலோசித்து வருகின்றனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|