| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| ஜுரிச் விமானநிலையத்தின் இரைச்சல் பிரச்னை முடிவுக்கு வந்தது |
| [ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 01:07.11 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்துக்கும், ஜேர்மனிக்கும் இடையில் வெகுநாட்களாக ஜுரிச் விமானநிலையத்தின் இரைச்சல் குறித்த தகராறு ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு ஒரு முடிவுக்கு வந்தது.ஒரு வாரத்தில் 16½ மணிநேரம் இரைச்சல் இல்லாமல் அமைதி காக்க ஜேர்மனி ஒத்துக்கொண்டது. இரவு நேர விமானங்கள் மூன்று மணிநேரத்துக்கு முன்பே இனி கிளம்பிவிடும்.
காலையில் வரும் விமானங்கள் அரைமணி நேரம் முன்னதாக வந்துவிடும். ஆனால் ஜேர்மனி தனது வான் எல்லைக்குள் பறக்கும் எந்த விமானப்பயணத்தையும் ரத்துச் செய்யாது. அனைத்துப் பயணங்களும் வழக்கம் போலத் தொடரும்.
தெற்கு ஜேர்மனியின் மேல் பறக்கும் விமானங்கள் வேலை நாட்களில் காலை 6.30 முதல் மாலை 6 மணி வரை பறக்கலாம். விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 வரை பறக்கலாம்.
இவ்வாறு இரு தரப்பிலிருந்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக சுவிஸ் போக்குவரத்துத் துறை அமைச்சர் டோரிஸ் லியுதார்ட் நேற்று தெரிவித்தார். பெர்னில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது என்றாலும் எங்களுக்கு பாதி திருப்தியாகவுள்ளது என்றார்.
ஏதோ ஒரு தீர்வு கிடைத்திருந்தாலும் இது நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பானது அல்ல. இருவரும் விட்டுக்கொடுத்திருக்கிறோம் அதுவே பேச்சுவார்த்தையின் பலன் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|