வணிக செய்தி
கறுப்புப் பண வாடிக்கையாளர்களை காப்பாற்ற சுவிஸ் வங்கிகள் புதிய உத்தி
[ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 12:09.25 பி.ப GMT ]
ஐரோப்பா உட்பட உலகளவில் கறுப்புப் பணத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்குமாறு பல்வேறு நாடுகள் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்த நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இவ்வங்கிகள் புதிய உத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

அதாவது, தங்களின் மிக வேண்டப்பட்ட பெரிய வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு உள்ள 1000 பிராங் நோட்டுகளை வாங்கி அதனை ரகசியப் பெட்டிகளில் டெபாஸிட் செய்யுமாறு அவை கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தப் பெட்டிகள் சுவிஸ் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும். மேலும், பணம் என்று அல்லது தங்கம், வைரம், கலைப்பொருள்கள், ஓவியங்கள் இவற்றில் முதலீடு செய்து அவற்றை பத்திரமாகப் பாதுகாக்க அவை வாடிக்கையாளருக்கு ரகசிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி (சுவிஸ் தேசிய வங்கி) தரவுகளின் படி 1000 பிராங் நோட்டுகள் சுவிஸ் நாட்டின் வங்கிப் பரிமாற்றங்களில் 60 சத இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரியவருகிறது. மேலும், கடந்த வருடத்தை விட இது 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிஸ் பேராசிரியரின் பொய்யும் புரட்டும் அம்பலமாயிற்று
உலகம் சுற்றும் படகோட்டிக்கு வந்த சோதனை
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடித்தளக் கட்டுமானத் திருப்பணி நிறைவு
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி
மலைப்பகுதியில் விடுமுறை இல்லங்கள் கட்ட நீதிமன்றம் தடை
சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:42.14 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். [மேலும்]
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:46.23 பி.ப ] []
ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியில் ஸ்வீடன் அணி சுவிட்சர்லாந்து அணியை 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. [மேலும்]
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ]
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்]
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]