| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| கறுப்பு பண விவகாரம்: அமெரிக்காவின் சோதனைக்கு சுவிஸ் எதிர்ப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 11:55.00 மு.ப GMT ] |
சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள அமெரிக்கர்களின் விபரத்தை அந்நாடு சோதனையிடுவதை சுவிஸ் விரும்பவில்லை என்று நிதியமைச்சர் ஈவ்லின் விட்மர் ஷ்லும்ஃப் தெரிவித்தார்.இது குறித்து ஈவ்லின் அளித்த பேட்டி, 11 சுவிஸ் வங்கிகளில் தனது நாட்டில் வரி கட்டாமல் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலைக் அமெரிக்கா கேட்கிறது.
ஏற்கெனவே இது போன்ற பட்டியலைப் சுவிஸிடம் பெற்றுக்கொண்டு உரியவர்களிடம் அபராதம் வாங்கியிருக்கிறது.
எனவே அமெரிக்காவின் விசாரணைகளிலிருந்து வங்கிகளைப் பாதுகாக்க சுவிஸ் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று கூறிய ஈவ்லின், அமெரிக்காவின் கோரிக்கைகள் குறித்து விபரமாக விளக்கவில்லை.
அமெரிக்கக் குடிமக்கள் சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக வைத்திருக்கும் இருப்பு குறித்து அறிய அமெரிக்கா முயல்வதாகவும் இந்த வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை சுவிஸ் வங்கிகளிடமிருந்து பெற்று அந்த பண முதலைகளிடம் வரியை அமெரிக்கா வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதற்காக அமெரிக்கா- சுவிஸ் இடையே வரி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அமெரிக்கா 300 சுவிஸ் வங்கிகளுக்குள்ளும் நுழைந்து வாடிக்கையாளர் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கிவிடும்.
ஆனால் இதனை சுவிஸ் அரசு விரும்பவில்லை என்றும் இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் ஈவ்லின் தெரிவித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|