சமூக செய்தி
சுவிஸ் பிம்பத்தை தகர்க்கும் ஆவணப்படம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 04:40.41 பி.ப GMT ]
லோகர்னோ திரைப்படவிழாவில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மைக்கேல் மூர் சுவிஸ் நாட்டுப்புறத்தைப் பற்றிய எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டார். அந்த விழாவில் தேசிய திரைப்படக் கொள்கைப் பற்றிப் பேசியபோது, இந்தப் படம் நாட்டின் வேதனைகளைப் படம் பிடித்துக் காட்டியிருப்பதாகக் கூறினார்.

சுவிஸ் நாட்டைப் பற்றி இதுவரை இருந்துவந்த எண்ணத்தை இந்தப்படம் மாற்றிவிட்டது. சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசும் மக்கள் வாழும் சில நாட்டுப்புற பகுதிகளில் இன்றைக்கு உள்ள சமூக நிலைமை குறித்துச் சிந்திக்க வைத்துள்ளது.

படத்தை தயாரித்த சீமோன் பௌமனும் ஆண்டிரியாஸ் ப்ஃபிஃப்னெரும் ஓராண்டு காலம் தங்களின் நாட்டைச் சுற்றிவரும் விபரங்களைச் சேகரித்து, நகைச் சுவையுடன் எடுத்துள்ளனர். படத்தில் உள்ள காட்சிகளில் சில லாரல் & ஹார்டி படத்தில் வருவதைப் போல இருக்கின்றன.

பிரச்னைகளின் தீவிரத்தைக் காட்டவில்லை. பட்டும்படாமல் யார் மனதும் நோகாமல் காட்சிகளை நகர்த்திச் செல்கின்றனர். நாட்டுப்புறத்தில் வாழும் சுவிஸ் மக்களுக்கு அங்கு வாழும் சிரமங்கள் புரியும்.

சுவிட்சர்லாந்து தான் திட்டமிட்டபடி இருக்கின்றதா அல்லது உலக அரங்கில் அதன் நிலை சற்றுத் தாழ்ந்துள்ளதா என்ற விவாதத்தை இந்தப் படம் எழுப்புகிறது என்கிறார் பௌமன். ஒரு புறம் மலைகளும், ஏரிகளும் சாக்லேட்டும் ரோஜர் ஃபெடரரும் சுவிஸ்ஸின் புகழ் பாடுகின்றனர்.

மறுபுறம் வரிஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாகவும் பன்னாட்டு ஏமாற்று நிறுவனங்களின் புகலிடமாகவும் ஐரோப்பாவின் பொழுது போக்கு தலமாகவும் இந்நாடு இருந்துவருகிறது. இந்த இரண்டு விடயங்களையும் தாங்கள் எடுத்துக்காட்ட விரும்பியதாக பௌமன் குறிப்பிட்டார்.

நாட்டுப்புறப் பகுதியில் காணப்படும் இனபேதம் இந்தப் படத்தில் வெளிப்பட்டுள்ளது. அமைதிப் பூங்காவாக விளங்கும் சுவிட்சர்லாந்தில் இனபேதம் என்பது உலகத்தார் ஒருவரும் நினைத்துப் பார்க்காத விடயம் என்பதால் சுவிட்சர்லாந்தின் பிம்பத்தை (நற்பெயரை) இப்படம் சிதறடித்துள்ளது.

முதன்முதலாக எடுக்கப்பட்ட படம் என்பதால் சற்றுக் குழப்பமாகத் தோன்றினாலும் புதிய விடயங்களைக் காண்பிப்பதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]