| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| கருமுட்டையை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்த அரசு அனுமதி |
| [ சனிக்கிழமை, 30 யூன் 2012, 07:16.21 மு.ப GMT ] |
செயற்கை கருவூட்டல் முறையில் (கருவகத்துக்கு வெளியே கரு உற்பத்தி செய்தல்) உருவாகும் கரு முட்டையை, மரபணுக் கோளாறுகளை அறியும் நோக்கத்திற்காக மட்டுமே மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.இதற்கான சட்டத்திருத்தத்தை 2013ம் ஆண்டில் செய்யப் போவதாகவும் அரசு அறிவித்தது. இப்போது கருமுட்டையை கருப்பைக்கு மாற்றுவதற்கு முன்பு மரபணு பரிசோதனை(PDI) செய்யக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
பரம்பரை வியாதி ஏற்படும் அபாயம் இருப்பதால் இப்போது இந்த மரபணுப் பரிசோதனைக்கு அரசு அனுமதி வழங்கலாம் என முடிவெடுத்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று கரு உற்பத்திக்கு பதிலாக இனி எட்டு கருக்களை உற்பத்தி செய்யலாம்.
மரபணு பரிசோதனை நடத்தி மரபுரீதியான நோய்ப் பாதிப்பு இல்லாத கருவைத் தேர்ந்தெடுத்து கருப்பைக்குள் வைக்கலாம். இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
இது தவிர சிறப்பான பண்புகளை உடைய குழந்தை வேண்டும் என்பதற்காகவோ, முன்பு பிறந்து நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைகளின் நோயைத் தீர்க்க திசுக்களைச் சேகரிப்பதற்காகவோ மரபணுப் பரிசோதனை நடத்தக்கூடாது.
பல கருக்கள் உற்பத்தியாகும் போது அவற்றைப் பாதுகாக்க, இப்போது சட்டம் அனுமதிக்கின்றது. இந்த அனுமதி தொடரும் என்றாலும், இந்தப் பாதுகாப்பு தாய் சேய் நலம் தொடர்பானதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 119 விதியில் இதற்கான மாற்றம் கொண்டுவரப்படும். இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு சட்ட மசோதாவை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் குழுவின் ஒப்புதுல் அரசு பெற்றுவிட்டது. இதில் மாற்றம் தேவைப்பட்டால் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|