சமூக செய்தி
சுவிஸ் வங்கி முதலீட்டில் மோசடி: முன்னாள் மேலாளர் மீது சந்தேகம்
[ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 03:29.20 பி.ப GMT ]
வாண்ட்டோபெல் என்ற சுவிஸ் தனியார் வங்கியின் ஜெனீவா கிளையில் ஸ்பெயின் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருந்தனர்.

இப்போது ஸ்பெயின் அரசு வரி செலுத்தவேண்டாம் என்று அறிவித்ததும் இந்த ரகசிய இருப்பை வெளியே கொண்டுவர முயன்றனர். வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முயன்ற போது தங்கள் கணக்கிலிருந்த பணம் 60, 70 சதவீதம் குறைந்திருந்ததை அறிந்தனர்.

உடனே வங்கி இப்பிரச்னை குறித்து ஆராய்ந்ததில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மேலாளர் மீது சந்தேகம் தோன்றியது. அவர் மீது டிசம்பர் 24 அன்று காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அவர் இப்போது சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி ஸ்பெயினில் தங்கியுள்ளார்.

முன்னாள் மேலாளர், தனது வங்கி வாடிக்கையாளர்களிடம் நல்ல இணக்கமான முறையில் பழகி வந்தார். அவர்களின் வங்கியிருப்பு குறித்த ஆவணங்களை அவ்வப்போது அவர்களிடம் காண்பித்ததால் எவருக்கும் இவர் மீது சந்தேகம் தோன்றவில்லை.

ஆனால் இவர் காண்பித்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா அதிகாரி டேரியோ ஜனி, நாளிதழுக்கு அளித்த தகவலில் முன்னாள் மேலாளர் மீது புகார் கொடுக்கப்பட்டதாக மட்டும் கூறினார். வங்கியின் செய்தித் தொடர்பாளர், விசாரணை நடந்துகொண்டிருப்பதால் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]