| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| சுவிட்சர்லாந்தில் பனிசரிவில் பலியான ஜேர்மானியர் |
| [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 05:22.39 பி.ப GMT ] |
பெர்னீஸ் ஓலெர்லாந்தில்(Bernese Oberland) உச்சிப்பனிசறுக்கு விளையாடப்போன நால்வர் குழுவில் ஒருவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.ராம்ஸ்லாயுனென்(Ramslauenen ski area) மலைப்பகுதிக்கு உயரே 2742 மீட்டர் தொலைவில் இருக்கும் அா்மிக்ஹார்னில்(Armighorn) நான்கு பேர் உச்சிப்பனி சறுக்கு விளையாட வந்தனர்.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் இருவர் 450 மீட்டருக்கு கீழே தள்ளப்பட்டனர். அதில் ஒருவர் சிறிய காயங்களுடன் பனியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார் மற்றவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த பனிச்சரிவில் சிக்காத மற்ற இருவரும் ரேகா மீட்புப்படைக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் பனிச்சரிவில் சிக்கியவர் மரணமடைந்துவிட்டார். இரண்டு ரேகா மீட்பு விமானங்கள் அங்கு விரைந்து வந்தும் பயனில்லை உயிரிழந்தவரின் உடலைத் தான் எடுத்துச் சென்றன.
டிசம்பர் 19 அன்று ஸ்வீடனைச்சேர்ந்த 23 வயதுப் பெண் வலாய்ஸ் மாநிலத்தில் நெந்தாஸ் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். டிசம்பர் 8 அன்று 39வயது டச்சுக்காரா் ஒருவர் வென்கெனில் ஏற்பட்ட பனிச்சரிவுக்குள் மாட்டிக்கொண்டார் அவரை மீட்க இயலவில்லை.
மறுநாள் ஒப்வால்டெனிஸ் உள்ள டிட்லிஸில் பதினோரு பேர் பனிச்சரிவில் சிக்கினர். இருவர் மட்டுமே காயமின்றி உயிர்தப்பினர்.
பனிக்காற்றும் பனிப்பொழிவும் அதிகாமாக இருப்பதால் ஸ்விஸ் மலைப்பகுதிகளில் உச்சிப்பனிச்சறுக்கு விளையாட்டில் ஆபத்து மிகுந்திருக்கிறது என்று பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு மையம் ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] | | சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|