| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| பேசெல் விமானநிலைத்தின் பணி ஆரம்பம் |
| [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:05.44 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் பேசெல் - முல்ஹவுஸ் விமானநிலையம் கடும்பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்தது. கடந்த வெள்ளியன்று மீண்டும் இவை செயல்படத் தொடங்கியுள்ளது.வியாழனன்று மாலை 5 மணிக்கு விமானங்கள் வந்து நிறுத்தப்பட்டன. ஓடு தளத்தில் படர்ந்திருந்த பனி அகற்றப்பட்டது. எட்டரை அளவில் விமானம் புறப்படத் திட்டமிடப்பட்டது. ஆனால் பனிப்பொழிவு அதிகமிருந்ததால் அன்றிரவு ஒரு விமானமும் கிளம்பவில்லை.
மறுநாள் வெள்ளியன்று அதிகாலை 6.41க்கு முதல் விமானம் கிளம்பியது. அதற்குச் சற்று முன்னதாக 5.09க்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இத்தகவல்களை விமானநிலையத்தின் இணையதளம் தெரிவித்தது.
இன்னும் சில விமானங்கள் புறப்படுவதிலும் வந்து இறங்குவதிலும் காலதாமதம் ஏற்படலாம். சில விமானசேவைகள் ரத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|