சமூக செய்தி
ஆங்கில மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நியுச்சேட்டல் மாநிலம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:15.18 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் ஃபிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களில் ஒன்றான நியுச்சேட்டலில் ஆங்கிலம் பேசுவதையும் வணிக மையங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்கும்படி புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

கடைகளில் "sales" என்ற ஆங்கிலச் சொல்லை நீக்கி விட்டு அதற்கு இணையான 'Soldes' என்ற பிரெஞ்சு சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு வணிகர்களிடம் அறிவுறுத்தியது.

இதற்குக் காரணம் "Sales" என்ற சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் "அழுக்கு" என்ற பொருள் இருப்பதால் இதைப் பயன்படுத்தக்கூடாது. நமது கடைகளும் வாணிபமும் அழுக்கில்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று வணிக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பியர் போன்ஹாட் தெரிவித்தார்.

அரசும், Sale என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது பிரெஞ்சு மொழிக்கு இழுக்காகும். அதைத் தடை செய்வதே சரி என்று கூறியுள்ளது. Sale என்ற சொல்லை சில்லறை வியாபாரிகள் குறிப்பாக, ஜேர்மனி பேசும் சுவிட்சர்லாந்து பகுதியில் இருப்பவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஜுரிச் நகரில் தான் தேசிய விளம்பரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. அங்கு ஆங்கிலத்தை ஆதரிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளாக ஜேர்மனி பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகள் இருப்பதால் இந்த மூன்றிலும் மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக விளம்பரங்களை ஆங்கிலத்தில் வெளியிடுவது எளிது என்பது தான்.

ஜுரிச், ஆங்கில மொழியைப் பொதுமொழியாகப் பயன்படுத்துவதை நியுச்சேட்டல் ஆதரிக்கவில்லை. "மாறாக தாங்கள் பிரெஞ்சு மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பிற பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களும் ஆதரிக்க வேண்டும் என்று டிடியர் பெர்பெரா தெரிவித்துள்ளார். இவர் நியுச்சேட்டலின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரெஞ்சுமொழிப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவரும் ஆவார்.

சுவிஸ் விளம்பரத்துறையின் Publicitie Suisse தலைவரான ஹெர்வெ தேவன்தெரி, பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரெஞ்சு மொழி மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று வற்புறுத்துவது சற்று அதிகப்படியாகத்தான் தோன்றுகிறது.

அரசு இதுதொடர்பாக சட்டம் இயற்ற இயலாது. கடைக்காரர்களும் வாடிக்கையாளரும் "Sale" என்ற சொல் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மொழிவாதிகள் தான் பிரெஞ்சு மையமிட்ட மொழிவழக்கை (Franglais) ஆதிக்கமொழி ஆக்கத் துடிக்கின்றனர் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]