| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சுவிஸ்ஸில் அதிகரித்துவரும் பன்மொழி பேசுவோர் எண்ணிக்கை |
| [ புதன்கிழமை, 20 யூன் 2012, 03:13.41 பி.ப GMT ] |
பல மொழிகளை பற்றி நன்கு அறிந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் பதினாறு சதவீதம் பேர் உள்ளனர் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.15 வயதுக்கு மேற்பட்ட 320,000 பேரிடம் மொழியறிவு பற்றி ஆய்வு நடத்திய போது ஜேர்மனி (65.6%) பிரெஞ்சு (22.8%), இத்தாலிய மொழி (8.4%) அதிகம் பேசப்படுவதாக அறியப்பட்டது. ஆங்கிலத்தை 4.5% பேர் பேசுகின்றனர். சுவிஸ்ஸின் நான்காவது தேசிய மொழியாக இருக்கும் ரோமான்ஸ் மொழியை 0.6% பேர் மட்டுமே பேசி வருகின்றனர்.
பணித்தளத்தில் சுவிஸ் – ஜேர்மனியை (காப்பு மொழி) 66.9% பேரும் ஜேர்மனியை 32.3% பேரும் பிரெஞ்சை 29% பேரும் ஆங்கிலத்தை 16.5% பேரும் பயன்படுத்துகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் 38.8% பேர் பின்பற்றுவதால் கத்தோலிக்க சமயமே பெரும்பான்மை மக்களின் சமயமாக உள்ளது. ஆனால் இதுவும் முன்பை விட 3.7% குறைந்துள்ளது.
கிறிஸ்தவ மறுமலர்ச்சி சபையினர் 30.9% பேர் வாழ்கின்றனர். முஸ்லீம் சமயத்தை 4.5% பேர் பின்பற்றுகின்றனர். யூதரின் எண்ணிக்கை வெறும் 0.2% மட்டுமே.
இன்றும் திசினோ, வலாய்ஸ், ஃபிரிபோர்க், அப்பென்ஸெல், ஜுரா மாநிலங்களில் 60% மக்கள் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுகின்றனர். ஜெனீவாவில் கத்தோலிக்கரும், சமயச் சார்பற்றோரும் ஏறத்தாழ 35% பேர் வாழ்கின்றனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|