சமூக செய்தி
சிறை கைதிக்கு புற்றுநோய்: ஆபத்தானவர் என்பதால் விடுதலை அளிக்க மறுத்த நீதிமன்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 08:40.43 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்து நாட்டின் மிக வயதான கைதிக்கு புராஸ்ட்டேட் சுரப்பியில் புற்றுநோய் வந்துவிட்டதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் ஜெனீவா நீதிமன்றம் அவர் மிகவும் ஆபத்தானவர் என்று தெரிவித்துள்ளது.

இவர் தன் வளர்ப்பு மகளை தனது 87 ஆவது வயதில் கற்பழித்த கொடுமைக்காரர் என்பதால் அவரை விடுதலை செய்ய முடியாது.

மேலும் அவருக்கு சிறையின் சார்பாக ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் நல்ல மருத்துவ சிகிச்சை தரப்படுவதால் அவரை விடுவிக்க வேண்டியதில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இது குறித்து ஜெனீவா சிறையின் சட்டதரனி கூறுகையில், முதியவரின் சிறை வாசம் அவருடைய உடல்நலத்துக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லை, மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தரக்குறைவாகவோ அல்லது மனிதநேயமற்றதாகவோ இல்லை, அவரை நல்ல கவனிப்புடன் பாதுகாத்து வருகின்றனர். எனவே அவரை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த கைதி இன்னும் பத்து முதல் பதினெட்டு மாதங்கள் வரை மட்டுமே வாழக்கூடும் என்பதால் மனிதநேயம் அடிப்படையில் இவரை விடுதலை செய்யலாம் என்று கைதியின் சட்டதரனி தன் கருத்தை ஊடகப் பேட்டியில் வெளிபடுத்தியுள்ளார்.

ஆனால் அரசுத் தரப்பு சட்டதரனி இவர் மிகவும் ஆபத்தானவர், பெண் பித்தர் எனவே இவரை விடுதலை செய்யக் கூடாது என்று கடுமையாக வாதாடி வெற்றியடைந்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பாதியில் நின்ற அதிவேக இரயில்: தத்தளித்த பயணிகள்
சுவிஸ் மக்களுக்கு மட்டுமே வீடு தருவோம்!
வேட்டைக்கு சென்ற இடத்தில் மகனை சுட்ட தந்தை
அரசியல்வாதிகளை பாராட்டும் சுவிஸ்
ஆடுகளை தேடி திரியும் பொலிசார்
இஸ்லாமிய அரசு முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல்
குழந்தைகளுக்கு எந்த உணவு ஆரோக்கியம் தெரியுமா?
பாதிக்கப்பட்ட சீஸை திருடிய திருடர்கள்: நோய் பரவும் அபாயம்
வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த இருவர் படுகாயம்
சுவிஸை கலக்கப்போகும் புதிய சாலைகள்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நிர்வாணமாக அரங்கேறிய கலை நிகழ்ச்சி
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 07:14.08 மு.ப ]
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மூன்று கலைஞர்கள் கரோஷிய நாட்டின் தலைநகரத்தில் நிர்வாண கலை நிகழ்ச்சி நடத்தியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
தேவாலயத்தை தீயிற்கு இரையாக்கிய 10 வயது சிறுவர்கள்? (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 06:18.02 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கு 10 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
சுத்தம் செய்ய நினைத்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 09:01.29 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் முதியவர் ஒருவர் ஏணியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
பொலிசில் வசமாய் சிக்கிய பலே திருடன்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 07:03.55 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளை அடித்த குற்றத்திற்காக சீனாவை சேர்ந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
காவல் உடையில் கலாட்டா
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 11:43.55 மு.ப ]
சுவிசில் பொலிசாரின் சீருடையினை அணிந்த இருவர், சாலையில் வந்த நபர் ஒருவரை கடத்தி சென்றுள்ளனர். [மேலும்]