சமூக செய்தி
வெளிநாட்டு செலவினங்களை குறைக்க தூதரகங்களை மூடும் சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 11:20.37 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்து தனது வெளிநாட்டுச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தால் தூதரக அலுவலகங்களையும், அலுவலர்களையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்கா, கனடாவில் உள்ள தூதரகங்களிலும் மாற்றம் வரப்போகின்றது.

செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றம், பல முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி சிகாகோவிலும் டொரொண்டோவிலும் இருக்கும் தூதரகங்கள் மூடப்படும்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தூதரகத்தின் செலவினங்கள் குறைக்கப்படும். நியூயோர்க்கில் உள்ள இரண்டு தனித்தனி தூதரகங்களும் எதிர்வரும் 2014ம் ஆண்டுக்குள் ஒன்றிணைக்கப்படும்.

இனி மேற்கொண்டு தூதரகச் செலவுகள் குறைக்கப்படமாட்டாது என்றும் இதுவே இறுதியானது என்று வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஜெர்ஹார்ட் புரூகெர் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் செலவுக் குறைப்புத் திட்டத்தினால் இலத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக கவுதமாலா, ஹவானா, லா பாஸ் போன்ற ஊர்களில் உள்ள தூதரகங்களும் பாதிப்படைகின்றன.

கிழக்கு ஐரோப்பா, வளைகுடாப்பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள தூதரகங்கள் சிலவும் மூடு விழா காணலாம்.

இந்தத் தூதரகங்களை மூடினாலும் அந்த நாடுகளில் வாழும் சுவிஸ் குடிமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். இருபத்தி நான்கு மணிநேர அலைபேசி வசதியும் உடனடி சேவையும் உறுதி செய்யப்படும்.

மியான்மரிலும், கிர்கிஸ்தானிலும் புதிய தூதரகங்கள் அமைக்கப்படும்.

செலவினக் குறைப்பு சுவிஸ்ஸோடு மட்டும் நின்றுவிடவில்லை, மற்ற ஐரோப்பிய நாடுகளும் தூதரகங்களைக் குறைக்கத் திட்டமிட்டு வருகின்றன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]