சுவிட்சர்லாந்தில் உள்ள கிரெடிட் சுவிஸ் வங்கி தன் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரை ஆட்குறைப்புச் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் மூத்த மேலாளர்களும் அடங்குவர்.இன்னும் 12 மாதத்துக்குள் இந்த ஆட்குறைப்பு நிறைவேறும் என்று பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் கிரெடிட் சுவிஸ் வங்கியிலிருந்து எந்த விளக்கமும் வெளிவரவில்லை.
தரமதிப்பீட்டில் குறைவான மதிப்பைப் பெற்றாலும் சந்தையில் ஏற்பட்ட இழப்பை இதனால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு நிலையில் சந்தை வர்த்தகப் பிரிவில் திண்டாடி வரும் கிரெடிட் சுவிஸ் ஆட்குறைப்புச் செய்ய முன்வந்ததில் பொருளாதார அறிஞர்களுக்கு வியப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
வங்கி ஆய்வாளரான ரெய்னர் ஸ்கியர்கா, இந்த ஆட்குறைப்பை கிரெடிட் சுவிஸ் எப்போதோ செய்திருக்க வேண்டும். இது காலந்தாழ்த்திய முடிவு என தெரிவித்தார். 2007 முதல் 2009 வரையிலான பொருளாதார நெருக்கடியின்போது அதன் விளைவுகளைப் பற்றி கிரெடிட் சுவிஸ் நன்கு தெரிந்து கொண்டது. ஆனால் கட்டமைப்பில் மாற்றம் எதனையும் அப்போது கொண்டுவராமல், தவறான வழியில் சென்றது.
வங்கி அதிகாரிகளும், நிர்வாகமும் நிம்மதியாக இருந்தனர். வங்கியின் சீர்திருத்தம் குறித்து சிறிதும் சிந்திக்கவேயில்லை. முதலீட்டாளர் வெளியேறியதை குற்றம்சாட்டியவாறு வங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
2011இன் இறுதிக் காலாண்டு அறிக்கையில் நிகர நஷ்டம் 637 மில்லியன் சுவிஸ் ஃபிராங்கை எட்டியிருந்தது. 2011ம் ஆண்டில் மொத்த இலாபம் 1.95 பில்லியன் சுவிஸ் ஃபிராங்காக இருந்தது. ஆனால் இதற்கு முந்தைய ஆண்டான 2010ம் ஆண்டில் இதே இலாபம் 5% பில்லியனாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆட்குறைப்பு உண்டு என்று அறிவித்தாலும் 3500 பேர் மட்டுமே வெளியேற்றப்படுவர் என்று அறிவித்தது. ஆனால் ஜுரிச்சில் இருந்த UBS வங்கி 3900 பேர் வேலையிழக்க நேரிடும் என்று அறிவித்திருந்தது.
சமீபத்தில் கிரெடிட் சுவிஸ் தாம் ஏற்கெனவே அறிவித்தபடி 2000 பேர் வேலையிழக்கப் போவதாகத் தெரிவித்தது. இவ்வங்கியின் அறிக்கை ஏற்கெனவே அறிவித்த ஆட்குறைப்பைத் தான் இப்போது நடைமுறைப்படுத்தப் போவதாகவும் புதிதாக ஆட்குறைப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. |