| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| இணையதள பயன்பாட்டால் 2% இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளர் |
| [ வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, 04:09.42 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் இளைஞர்களில் 2.3 சதவீதம் பேர் இணையதள நடவடிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.அரசைப் பொறுத்தவரை இளைஞர் இன்னும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு வெளியிட்ட அறிக்கையில் ஒரு நாளைக்கு சுவிஸ் சிறுவர் சராசரியாக இரண்டு மணி நேரம் இணயதள நடவடிக்கையில் செலவிடுகின்றனர். இதுவே விடுமுறை நாளாக இருந்தால் மூன்று மணிநேரம் செலவிடுகின்றனர்.
இணையதளப் பயன்பாட்டில் சிலர் சில நிமிடங்களும் வேறு சிலர் பல மணி நேரங்களும் செலவழிக்கின்றனர். ஆனால் சிலருக்கு மட்டுமே கடுமையான பிரச்னைகள் தோன்றியுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டில் போதை மற்றும் மதுப் பிரச்னைக்கான சிறப்பு சிகிச்சை மையத்தில் (Sucht Info Schweiz) 13 வயது முதல் 29 வயதிலான இணையதளப் பயனாளிகளிடம் ஆய்வு செய்த போது 2.3 சதவீதம் பேருக்கு உடல், மன ரீதியான பிரச்னைகள் இருந்தன.
வீடியோ விளையாட்டுகள் விளையாடிய சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில் 4.9 சதவீதம் பேர் பிரச்னைக்குள்ளாகியிருந்தனர். இளைஞரை விட சிறுவர்களே இரண்டுமடங்கு சிரமப்படுவது தெரியவந்தது.
அதிக நேரம் இணையதளத்தில் நேரத்தைச் செலவழிக்கும் போது உணவு உண்ணல், உடல் தகுதி மற்றும் தூக்கப் பழக்கத்தில் எதிர் விளைவுகள் தோன்றும். அதிகநேரம் கனணித் திரையின் முன்பு உட்கார்ந்திருப்பதால் தசை இறுக்கமும், முதுகில் சில பிரச்னைகளும் உண்டாகும்.
உள்துறை அமைச்சகத்திடம் சுவிஸ் அரசு, இன்னும் விரிவாக இணையதளப் பயனாளிகளிடம் ஆராய்ச்சி செய்யுமாறு வேண்டிக் கொள்வதாக தெரிவித்தது. சில பிரச்னைகளில் இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று அரசு விரும்புகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|