| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க அரசு தீவிரம் |
| [ வியாழக்கிழமை, 28 யூன் 2012, 03:00.57 பி.ப GMT ] |
சர்வதேச நெருக்கடி காரணமாக சுவிஸ் அரசாங்கம் பாராளுமன்றத்திடமிருந்து வங்கி ரகசியத்தை வெளியிடும் சலுகையை எதிர்பார்க்கின்றது.இந்தச் சலுகையை பாராளுமன்றம் அனுமதித்தால் MROS என்ற (Money Laundering Report Office) அலுவலகம் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் குறித்த தகவல்களை வெளிநாட்டுப் பங்குதாரருக்கு அறிவிக்கும். MROS என்பது ஸ்விஸ்ஸின் மத்திய காவல்துறையின் ஒரு பிரிவாகும்.
MROS என்ற துப்பறியும் பிரிவு உலகளவில் செயல்படும் Egmont Group-ல் உறுப்பினராக உள்ளது. இந்த எக்மாண்ட் குரூப் என்பது ஒரு சர்வதேச துப்பறியும் அமைப்பு. இது நிதி ரகசியங்களைப் பற்றித் துப்பறிகின்றது.
இந்த அமைப்பு போன யூலை முதல் சுவிட்சர்லாந்தை MROS-ஐ தனது அமைப்பில் இருந்து விலக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் 127 நாடுகளைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மற்ற அனைத்து நாடுகளும் தங்கள் கறுப்பு பண முதலைகளின் ரகசியங்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டவில்லை. ஆனால் சுவிஸ்ஸின் MROS மட்டும் இவர்களோடு ஒத்துழைக்க மறுத்தது. நிதி நடவடிக்கைப் பணிப் படை என்ற FATC-யும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
இப்படை கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களையும், தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்பவர்களையும் எதிர்த்து வருகின்றது. எனவே இந்தப் படை MROS இடம் உள்ள கறுப்புப் பணத்தை வங்கியில் போட்டு வைத்திருப்பவரின் பட்டியலை கேட்கின்றது.
சுவிஸ்ஸின் தற்போதைய சட்டம் இந்த வங்கி ரகசியங்களைத் தர அனுமதிக்காது. எனவே அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே அந்நிய நாட்டவரின் வங்கிக் கணக்கு, பரிவர்த்தனை விபரம் வங்கி இருப்பு போன்ற ரகசியங்களை வெளியிட முடியும்.
அரசு இந்தச் சட்ட நடவடிக்கை எடுப்பதன் நோக்கம் வரி ஏய்ப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதே காரணமாகும். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ] |
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] | | சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்] | | 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|