ஏனைய சுவிஸ் செய்தி
UBS வங்கி ரகசியங்களை வெளியிட்டவருக்கு 104 மில்லியன் டாலர் பரிசு
[ புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2012, 11:18.21 மு.ப GMT ]
சுவிஸ் வங்கியில் (UBS) கணக்கு வைத்துள்ள அமெரிக்க வாடிக்கையாளர்களின் விபரத்தை ரகசியமாகக் கண்டுபிடித்துக் கொடுத்தவருக்கு அமெரிக்க வரித்துறை அதிகாரிகள் ரொக்கப்பரிசாக 104 மில்லியன் டொலர் வழங்கினர்.

இவர் கொடுத்த விபரங்களின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் வருமான வரி வசூல் செய்தனர்.

ரகசியத்தகவலைக் கொடுத்த பிராட்லி பிர்கென் ஃபெல்ட் கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையானார்.

அவருடைய சட்டத்தரனிகள் நேற்று வாஷிங்டனில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிராட்லி கலந்து கொள்ளவில்லை.

இந்தச் சந்திப்பினை நிகழ்த்திய தேசிய ரகசியம் தெரிவிப்போர் மையத்தைச் சேர்ந்த சட்டத்தரனிகள், இப்போது தான் முதன்முறையாக ரகசியத் தகவல் அளித்த ஒருவருக்கு உள்நாட்டு வருவாய்த்துறை இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக வழங்கியுள்ளது என்றனர்.

உள்நாட்டு வருவாய்த்துறை இன்று 104 மில்லியன் பேருக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இந்தத் தகவலின் வரி ஏய்ப்பு ரகசியத்தை வெளிப்படுத்துவோருக்கு இனி வருவாய்த்துறை பரிசளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சட்டத்தரனி ஸ்டீபன் கோன் என்பவரும் டீன் ஜெர்ப் என்பவரும் ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள வங்கிகளுக்கும் வருவாய்த் துறை ஒரு தகவலை அனுப்பியுள்ளது.

அதில் இனி வரி ஏய்ப்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டாம் என்றும், ஆதரவு வழங்கியவர்கள் பிடிபடுவது உறுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]