சமூக செய்தி
பணியிடங்களில் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கும் சுவிஸ் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 07:39.40 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் பணித்தளங்களில் சுவிஸ் பணியாளர்கள் மகிழ்ச்சியோடும் மணநிறைவோடும் இருப்பதாகத் தெரிவித்தனர்.

சமீபத்தில் வெளியான இந்த ஆய்வை பொருளாதார நடவடிக்கைகளுக்கான அரசுத் துறையும்(Seco), வடமேற்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியது.

சுவிட்சர்லாந்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளிலும் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. சுவிட்சர்லாந்தில் பணிநேர கெடுபிடிகள் குறைவு, நெகிழ்ச்சியான பணிநேர அமைப்பு காணப்படுகிறது. இந்த வசதி வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் கிடையாது.

சுவிஸ் பணியாளர்கள் தமது பணி குறித்து முடிவெடுக்கும் உரிமை பெற்றுள்ளனர் மேலும் சுதந்திரமாகச் செயல்படுகின்றனர். பல்வேறு பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. 91% பேர் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருப்பதாகத் தெரிவித்தனர். பணியிழப்பு குறித்து இவர்கள் அஞ்வதுமில்லை.

டென்மார்க், பிரிட்டன், நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் பணியாளர்கள் மனநிறைவோடு பணியாற்றுகின்றனர். சுவிஸ்ஸில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுத்த பணியைச் செய்து முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகமாக இருக்கின்றது. 2005 முதல் மன அழுத்தம் தொடர்பான உடல்நலக் கோளாறுகள் பெருகி வருகின்றன.

சுவிஸ் பணியாளர்களில் ஆரோக்கியமாக இருப்பதாக 87% பேர் கூறினர். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த எண்ணிக்கை 78% ஆக உள்ளது. பணியாளர்களுக்கு கழுத்து, தோள்பட்டையில் வலி, முதுகு வலி, தலைவலி, கண் சோர்வு, கால் வலி, தூக்கமின்மை, வயிற்றுவலி போன்றவை ஏற்படுகின்றன.

நிர்வாகப் பொறுப்பில் பெண்கள் குறைவாக உள்ளனர் 20% பேர் மட்டும் இருந்து வருகின்றனர். ஐரோப்பாவில் இந்த எண்ணிக்கை 25 இல் இருந்து 29 ஆக (2005-2010) உயர்ந்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]