| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| ரியோ+20 மாநாட்டில் பெரிய பயன் ஏதுமில்லை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2012, 05:20.53 பி.ப GMT ] |
அண்மையில் நடந்த முடிந்த ரியோ + 20 பசுமை மாநாட்டில், வறுமையை ஒழிக்கவும் எரி சக்தியைப் பெருக்க உருப்படியான திட்டங்களோ, ஆலோசனைகளோ வெளியிடப்படவில்லை என்று சுவிஸ் விமர்சித்துள்ளது.1992 பூமி மாநாடு நடந்தபோது எடுத்த தீர்மானங்களைச் சரிவர நிறைவேற்றவிடாமல் மீண்டும் அதைப் பற்றியே பேசியபடி கடந்த வெள்ளியன்று ரியோ + 20 மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் எவருக்கும் மகிழ்ச்சியில்லை என்று அதன் பொதுச்செயலர் ஷா ஜுகாங் தெரிவித்தார்.
சுவிஸ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதில், பசுமைப் பொருளாதாரத்துக்கான முன்னுரையாக இந்த மாநாடு அமைந்ததைப் பாராட்டினர் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத வகையில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் இம் மாநாடு திட்டமிட்டது.
பசுமைச் சமாதானத்தின் நிர்வாக இயக்குநரான குமி நய்டூ, முந்தைய மாநாட்டில் எடுத்த முடிவுகளில் உருப்படியாகத் தோன்றியதை எல்லாம் இந்த மாநாட்டில் நீக்கி விட்டனர். எதிர்காலத்தில் நமது தேவைகளை எடுத்துரைக்க வேண்டிய தலைவர்கள் எவரும் நம்மிடையே இல்லை என்றார்.
அனைத்து நாடுகளும் தங்களுடைய நிலையான மேம்பாட்டுக் கொள்கைகளும் ஒன்றாக பசுமைப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இந்த ரியோ + 20 இல் கையெழுத்தான ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
சுவிட்சர்லாந்தில் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் டோரிஸ் லியுதார்ட் இந்த ஆண்டின் இறுதியில் அரசின் பார்வைக்காகப் பசுமைப் பொருளாதாரம் குறித்த ஓர் அறிக்கையை அனுப்புவார். 2010லியே சுவிஸ் அமைச்சகம் பசுமைப் பொருளாதாரத்திற்கான ஆறு செயல்பாட்டுப் பகுதிகளை வரையறுத்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] | | சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|