சமூக செய்தி
சுவிஸ் நாட்டவர் விசா இல்லாமல் அமெரிக்கா பறக்கலாம்
[ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 01:16.29 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தும், அமெரிக்காவும் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதன் பலனாக சுவிஸ் மக்கள் இனி விசா இல்லாமல் அமெரிக்கா சென்று 90 நாட்கள் வரை தங்கலாம்.

இத்திட்டத்திற்கு அமெரிக்கா சுவிஸ் அரசுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

1. தீவிரக் குற்றங்களை தடுக்கும், எதிர்க்கும் திட்டத்திற்காக PCSC(prevent and combat serious crime) கைரேகை மற்றும் மரபணுத் தகவல்களை சுவிஸ் அரசு அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும்.

2. சந்தேகப்படும் தீவிரவாதி அல்லது அறியப்பட்ட தீவிரவாதிகளின் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

3. PCSC திட்டத்தின் கீழ் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் காணப்படும் குற்றங்கள் அனைத்தும் தீவிரக் குற்றங்களாகும்.

4. மூன்றாண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர் தீவிரக் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவர். ஆனால் தீவிரக்குற்றங்களின் பட்டியல் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் இரு நாட்டவரும், மற்ற நாட்டின் வேண்டுகோளுக்கிணங்க குற்றவாளிகளின் தனிப்பட்ட தகவல்களை மறைக்கலாம் அல்லது நீக்கிவிடலாம்.

இந்த ஒப்பந்தம், சுவிஸ் அரசு, வெளியுறவுத்துறை நடவடிக்கைக் குழுவின் எதிர்பார்ப்புகள், மாநில காவல்துறை, நீதித்துறை இயக்குநர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாக சுவிஸ் மத்திய காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும், தேவைப்பட்டால் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். பின்பு PCSC(prevent and combat serious crime) திட்டம் சுவிட்சர்லாந்தால் எதிர்கொள்ளப்படும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]