ஏனைய சுவிஸ் செய்தி
புகைப்பிடிக்கத் தடை பற்றி பொதுவாக்கெடுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 10:03.33 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் இன்று புகைப்பழக்கத்தைப் பொது இடங்களில் தடை செய்வது, வயதான வீட்டுரிமையாளர்களுக்கு வரிச் சலுகை மற்றும் பள்ளிக்கல்வித்திட்டத்தில் இசைக்கல்வியில் சேர்க்கை குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இவற்றில் இசைக்கல்வி மட்டுமே சட்டமாகும் என்றும் மற்ற இரண்டும் சட்டமாவதற்கான மக்களாதரவைப் பெறாது என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஒருவரது புகைப்பழக்கம் அருகில் இருப்போருக்கும் இடையூறாக இருப்பதை வலியுறுத்தி இவர்களுக்குத் தனியிடம் வழங்கவேண்டும் என்று பலரும் கருதுகின்றனர்.

உணவகங்களில் உணவுண்ண வருபவர்கள் புகைப்பதால் அங்கு உணவு பரிமாறும் பணியாளர்களில் சுமார் பத்தாயிரம் பேர் நுரையீரல் நோயால் அவதிப்படுகின்றனர்.

நுரையீரல் பாதுகாப்பு கடிதமும் வேறு பல சுகாதார அமைப்புகளும் தொழிற் சங்கங்களும் மைய இடது கட்சிகளும் புகைப்பழக்கத்திற்கு எதிராக தேவையான கையெழுத்துக்களைப் பெற்று தேசிய அளவில் சட்டமாக்கும் முயற்சியில் இடம் பெற்றுள்ளது.

ஆனால் வர்த்தக சமூகமும் மையக் கட்சியினரும் வலதுசாரியினரும் அரசாங்கமும் இச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இப்போது சுவிட்சர்லாந்தில் உள்ள 26 மாநிலங்களில் 8 மாநிலங்கள் உணவகங்களில் மதுபானக்கூடங்களிலும் புகைப்பதை தடை செய்து விட்டன.

புகைப்பதற்கு என்று தனி அறையும் பணியாளர் சேவையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]