சமூக செய்தி
கடுமையான சட்டங்களை எதிர்த்து அகதிகள் போராட்டம்
[ திங்கட்கிழமை, 25 யூன் 2012, 03:07.09 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரத்தில் சுவிஸ் அகதிச் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதை எதிர்த்து அகதிகள் போராட்டத்தில் இறங்கினர்.

தொழிற்சங்கம், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்பு போன்றவையும் இந்த அகதிகளோடு கைகோர்த்து நின்ற இந்த இப்போராட்டத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.

அகதிகளாக வருவோருக்குரிய சமூக நலத்திட்ட உதவிகளை மறுத்தல், அகதிக் குடும்ப உரிமைகளை வரையறுத்தல், ஒத்துழைக்காத புகலிடம் தேடுவோரை அடைத்து வைக்கத் தனியாக மையங்கள் போன்ற கட்டுப்பாடுகளை அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கடந்த வாரம் இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டது. உடனே அகதிகள் போராடத் திட்டமிட்டு சமீபத்தில் தலைநகரின் ரயில் நிலையத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்தினர்.

அகதிகளிடம் காட்டப்படும் பாகுபாடு, சுரண்டல், ஒதுக்கிவைத்தல் ஆகியற்றிற்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தினர். பசுமைக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பல்தாசார் கிளாட்லி, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் மனித நேயத்துக்கு எதிரானவை என்றார்.

சுவிட்சர்லாந்தில் பயம், கோபம் போன்றவற்றிற்கு இடமில்லை. துணிவு, நம்பிக்கை, ஒற்றுமை ஆகிய பண்புகளுக்கு இடமுண்டு என்றார். கிளாட்டிலி புகலிடம் தேடி வருவோர், நமது மக்கள் தொகையில் 0.2% தான் அகதிகளோ 0.6% மட்டுமே.

இந்நிலையில் இன்னும் ஏராளமானோர் வந்து தங்க நமது நாட்டில் இடமும், வனமும் இருக்கின்றது என்றும் கூறினார். இந்தப் போராட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் நகரில் இருந்து ஸ்ட்ராஸ்போக் வரை 130 பேர் கொண்ட ஒரு குழு நடந்து வந்தது.

இவர்களுக்கு ஐரோப்பாவில் எந்த அதிகாரமும், தகுதியும் கிடையாது. இவர்கள் சமீபத்தில் பேஸெல் வழியாக ஸ்காட்லாந்தின் எல்லையைக் கடந்து வந்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]