| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| ஜுரிச் போராட்டம் குறித்து லெனின் எழுதிய கருத்துக்கள் வெளியீடு |
| [ வெள்ளிக்கிழமை, 13 யூலை 2012, 01:37.22 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து வரலாற்றில் ஜுரிச் போராட்டம் நடந்து நூறாண்டுகள் நிறைவுற்றநிலையில் இப்போராட்டம் குறித்து ரஷ்யத் தலைவர் லெனின் கூறிய கருத்துகள் வெளிவந்துள்ளன.கடந்த 1912ம் ஆண்டு யூலை மாதம் 12ம் திகதியன்று, சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள தொழில்நுட்ப கைவினைஞர்களான பெயிண்ட்டர், ஃபிட்டர் போன்றோர் ஒரு போராட்டத்தை நடத்தினர்.
அந்தப் போராட்டத்தின் சிறப்பியல்புகள் குறித்து ரஷ்ய தலைவர் லெனின் 3 பக்க கட்டுரையொன்றை அந்நாட்டின் ப்ராவ்தா என்ற செய்தித்தாளில் எழுதியிருந்தார். ரஷ்யாவை விட்டு வெளியேறி அவர் அப்போது ஐரோப்பாவில் இருந்துவந்தார்.
விளாடிமீர் இலியாச் உல்யானோப் லெனின் என்ற முழுப்பெயர் கொண்ட லெனின் இந்தப் போராட்டம் குறித்து ரஷ்ய மொழியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து மார்க்ஸிஸ்ட் கட்சியினர் தமது இணையதளத்தின் பழையநூல் காப்பகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.
பேசெல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பெர்னார்டு டீகென் Swissinfo.ch-ல் இந்தப் போராட்டத்தின் சிறப்பை விவரித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் அந்தக்கால கட்டத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமாகும். இது ஒரு தொழில் அல்லது ஒரு துறை சார்ந்தவர்கள் நடத்திய போராட்டம் அல்ல. பலதொழில் செய்தவர்களும் தொழிலாளி என்ற ஒரே முத்திரையின்கீழ் நடத்தியதாகும் என்று டீகென் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
மேலும் இந்தப் போராட்டம் நல்லமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர். போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று சொன்னதும் ஆரம்பித்தனர். முடிக்கும் நேரம் வந்தவுடன் முடித்துவிட்டனர். போராட்டத்தில் எந்தப் பிரச்னையும் கிடையாது என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல் |
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்] | | அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர் |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] [ ] |
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்] | | ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை |
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] [ ] |
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்] | | ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை |
| [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்] | | தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|