| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சிரியா மீது புதிய தடை விதித்துள்ள சுவிஸ் |
| [ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:08.34 பி.ப GMT ] |
சிரியாவில் ராணுவ வன்முறைகள் இன்னும் நிறுத்தப்படாததால் சுவிட்சர்லாந்து, ஜனாதிபதி ஆசாத் மீது பல தடைகளை விதித்துள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டது.
இப்போது சிரியாவின் ஜனாதிபதி ஆசாதின் அரசியல் மற்றும் ஊடக ஆலோசகரான போதைனா ஷாபான் மற்றும் நிதித்துறை உள்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்புத் துறை அரசு வானொலி, தொலைக்காட்சிகளுக்கு புதிதாக சுவிஸ் தடை விதித்துள்ளது.
இதற்கு முன்பு விதிக்கப்பட்ட தடையானது சுவிஸ் நிதி அமைப்புகள் சிரியா வங்கிகளுடன் புதிய தொழில் தொடர்புகளை முடக்குவதற்காகும். தற்போது மேலும் சிரியாவின் சர்வதேச இஸ்லாமிய வங்கியின் மீது புதிதாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அல் ஆசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர் மற்றும் அலுவலக அதிகாரிகள் ஆகியோரின் சொத்துகளும், பயணமும் தடைக்கு உள்ளாகின. 70 மில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்பிலான சிரியா சொத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவம் சார்ந்த 42 தொழில் மற்றும் 128 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் தாவூது ராஜாவும் துணைப் பாதுகாப்பு அமைச்சர் அசாஃப் சவுக்கத்தும் தற்கொலைப்படையினரின் தாக்குதலால் உயிரிழந்தனர். மக்கள்படை ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தி வருவதாக ராய்ட்டா செய்திகள் தெரிவிக்கின்றன. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|