| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| அந்நிய நாட்டு குற்றவாளிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும்: மக்கள் கட்சி கோரிக்கை |
| [ புதன்கிழமை, 25 யூலை 2012, 06:45.04 பி.ப GMT ] |
சுவிஸ் மக்கள் கட்சியினர்(வலது சாரி) வெளிநாட்டுக் குற்றவாளிகளை திருப்பியனுப்ப வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டின் நவம்பரில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இக்கட்சி வெற்றி பெற்றது.மூன்று பக்கங்களில் ஐந்து சட்டங்களை இயற்றி முதல் வாக்கெடுப்பை நடத்தியது. ஆனால் அரசு அதை நடைமுறைப் படுத்துவதில் கால தாமதம் செய்துவருகிறது.
மக்களின் கருத்துக்கு மாறாக அரசு இந்த விடயத்தில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து மீண்டும் ஒரு வாக்கெடுப்பை எடுக்க மத்திய அரசிடமிருந்து நேற்று அனுமதி பெற்றது. எதிர்வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 24 க்குள் 100,000 கையெழுத்துகளைப் பெற முனைந்துள்ளது.
இதன் முதல் வாக்கெடுப்பில், அந்நிய நாட்டுக் குற்றவாளிகள் எவ்விதக் குற்றம் செய்திருந்தாலும் அந்தக் குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் அரசு மனித நேயமற்ற நடவடிக்கையாகவும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானதாகவும் கருதியது.
இரண்டாவதாக இனி நடத்தப்போகும் வாக்கெடுப்புக்கான, சட்ட விதிகளில் குற்றவாளிகள் சிறிது காலம் சிறையில் இருந்திருந்தாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் குற்றப்பட்டியலை விரிவாக்கியுள்ளது.
மக்கள் கட்சி, அரசு வாக்காளர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கூட வெளியேற்றுவதில் தயக்கம் காட்டக்கூடாது. குற்றவாளியின் தனிநபர் அந்தஸ்தையும் கருத்தில் கொள்ளக்கூடாது என்பதை இக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
தற்காப்பு மற்றும் மன்னிக்கக்கூடிய தேவை இருந்தால் மட்டுமே விதிவிலக்கு அளிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்புக்கான சட்டவிதிகளில், சர்வதேசச் சட்டத்தைக் காட்டிலும் தாய்நாட்டுச்(சுவிஸ்) சட்டத்திற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|