சமூக செய்தி
மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 03:50.17 பி.ப GMT ]
சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு எலியின் மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்கின்றனர்.

இப்பணியை நிறைவேற்றாவிட்டால் மனித மூளையின் நரம்பிணைப்புகளின் வரைபடத்தில் ஒவ்வொரு நரம்பிணைப்பின் இருப்பிடத்தைக் குறித்து அறிய நாற்பது ஐம்பதாண்டுகள் ஆகலாம் என்று லாசேனில் உள்ள புளு ப்ரெயின் ஆய்வுத்திட்டத்தின் தலைவரான ஹென்றி மர்க்ராம் கூறினார்.

கடந்த 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுத்திட்டத்தின் மூலமாக பாலூட்டி மூளை ஒன்றசை் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளை உருவாக்குவது பெரிய சவாலாக உள்ளது. இந்த இணைப்பின் மூலமாகத்தான் மின் மற்றும் வேதித் தொடர்புகள் ஏற்படுகின்றன.

உயிருள்ள மூளைத் திசுவிலிருந்து 20 ஆண்டுகளாக நரம்பணுக்களை எடுத்து தொகுத்து நரம்பிணைப்புகளை உருவாக்கி அதற்கிடையே தொடர்புபடுத்தப்படும் மின் மற்றும் வேதிப் பண்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு நரம்பணுவையும் புளு ஜீன் சூப்பர் கம்யூட்டரில் முப்பரிமாண முறையில் மீட்டமைத்தனர். சுமார் 10,000 நரம்பணுக்களை இப்போது இணைத்துள்ளனர். நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் என்ற அமைப்பு வெளியிடும் வாரப்பத்திரிகை ஒன்றில் விஞ்ஞானிகள் தமது செயற்கை நரம்பிணைப்பு வரைபடத் திட்டம் பற்றி ஆய்வுக்கட்டுறை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் இந்த நரம்பணு இணைப்பு இயற்கையான மூளையில் இருப்பதைப் போல 75 - 95 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது.

இனி வரும் காலங்களில் இந்த ஆய்வு இன்னும் விளக்கமான முறையில் நரம்பியல் அமைப்புகளில் மாதிரி வடிவத்தை (Models) உருவாக்க உதவும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]