| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| இணையதளங்களை கண்காணிக்கும் காவல்துறை |
| [ வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 02:40.01 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் மத்தியக் காவல்துறை, தீவிரவாத இஸ்லாமியரின் ஜிகாத் இணையதளங்களையும், ஆட்கடத்தலில் ஈடுபட்டுவரும் இத்தாலியின் மாஃபியா கும்பலையும் தனது கண்காணிப்பில் வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை காவல்துறை சமர்பித்தது. அதில் அதீத வன்முறைக் காட்சிகளைக் கொண்டிருக்கும் இணையதளங்கள், படிப்பிக்கும் வழிகாட்டுதல் நிறைந்த இணையதளங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடத் தூண்டும் சம்பவங்களைப், படங்களை உள்ளடக்கிய இணைய தளங்களைத் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளது.
சுவிட்சர்லாந்து வன்முறைச் செயல்களுக்கான இலக்காக இது இல்லை என்றாலும் இந்த ஹாத் குழுக்கள் தங்களின் தீவிரவாதக் குழுக்களான அடிப்படை ஆதவைத் திரட்டவும் பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டின் எளிமையான சட்டங்களைப் பயன்படுத்துகின்றன, என்று மத்திய காவல் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது.
சுவிஸ்ஸில் வாழ்ந்து வரும் புதிதாக மதம் மாறிய ஒரு இஸ்லாமியர், ஐரோப்பிய நாட்டில் இருக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தைத் தாக்குவது குறித்து இணையதளம் மூலமாக விவாதித்து வருகிறார். இது போன்ற செயல்கள் இனி கண்காணிக்கப்படும்.
இந்தக் கண்காணிப்பு பணிக்காக காவல்துறையில் 2011 முதல் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஃபெட் போல் (Fed Pol) என்ற மத்திய காவல்துறை இனி மத்தியப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|