சமூக செய்தி
மீண்டும் கிறிஸ்டல்நாட்(Kristallnacht) வேண்டும்: மக்கள் கட்சி உறுப்பினரின் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 27 யூன் 2012, 07:56.17 பி.ப GMT ]
சுவிஸ் மக்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் தனது பகிர்தளத்தில் (Tweeter) மீண்டும் ஒரு கிறிஸ்டல்நட்(Kristallnacht) தேவைப்படலாம் என மசூதிகளை எதிர்த்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இதனையறிந்த காவல்துறை இன எதிர்ப்புச் சட்டத்தின்படி அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. கிறிஸ்டல்நாட் என்பது 1938ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜேர்மனியில் யூதர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியத்தைக் குறிக்கும். அன்றிரவு சுமார் 100 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களின் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. தெரு முழுக்க சன்னல் கண்ணாடிகள் சிதறிக் கிடந்தன. இது போல இப்போது முஸ்லீம்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்று மக்கள்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இவரைக் கண்டுபிடித்து இவரிடமிருந்த கணிப்பொறி முதலானவற்றை காவலர் கைப்பற்றினர். இவரிடம் விசாரித்ததற்கு இவர் மே மாதம் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் மீதான தனது கருத்தை வெளியிட்டதாகவும் அதை ஊடகம் தவறாகப் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த பூமியின் களங்கம் தொலைய சிலரை சுட்டுத் தள்ள வேண்டும் என்றும் இவர் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். இவர் ஓர் உள்ளூர்ப் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினராவர். ஜுரிச்சின் ஏழாவது, எட்டாவது மாவட்டங்களின் மக்கள் கட்சி பொறுப்பாளராவார்.

ஜுரிச்சின் மக்கள் கட்சித் தலைவர் ராஜர் லீபி இந்த வழக்குக் குறித்து கருத்துத் தெரிவித்த போது, இவரை கட்சியிலிருந்து விலக்க வேண்டும் என்றார். பள்ளி நிர்வாகக் குழுவிலிருந்து இவரை வெளியேற்ற வேண்டும் என்று பசுமைக்கட்சியின் இளைஞர் அணி கருத்துத் தெரிவித்தது. இசுலாமிய மத்தியக் குழுவும் இவர்மீது கண்டனம் வெளியிட்டது.

யூதர்களுக்கான சுவிஸ் அமைப்பு, இந்தக் கருத்து யூதர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிரானதாகும். எனவே சுவிஸ் மக்கள் கட்சி இக்கருத்துக்கான எதிர்ப்பை பகிரங்கமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]