சமூக செய்தி
சிரியாவில் அமைதி திரும்புவது கடினம் தான்: சுவிஸ் பத்திரிக்கை
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:26.43 பி.ப GMT ]
சிரியாவின் போர்ச்சூழல் குறித்து ஜெனீவா நகரில் உள்ள முகம்மது-ரெசா டிஜலிலி(Mohammad-Reza Djalili) என்ற நிபுணர் பத்திரிக்கை நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது இப்போதைக்கு அமைதி திரும்புவது கடினமே என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்படைக்கு போதிய ஆட்கள் இல்லாத போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதுங்கியிருந்து, பின்பு படைகளைப் பலப்படுத்தி மீண்டும் போரைத் தொடங்கலாம்.

1. ஆசாதின் ராணுவம் பின்னடைவைச் சந்திக்குமா?
அப்படி நடக்க வாய்ப்பில்லை, ஆசாதிடம் இன்னும் வலுவான துருப்புச்சீட்டுகள் இருக்கின்றன. அவர் அலாவி(Alawi), கிறிஸ்தவர், சன்னி முஸ்லீம்களின் ஒரு பகுதியினர் போன்றோரின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் எனவே ராணுவப் படை பின்னடைய வாய்ப்பில்லை.

2. அண்டை நாடுகள் இந்த பிரச்னைகளில் பங்குபெறுமா?
இப்போதே ஆயிரக்கணக்கானோர் லெபனானுக்கு தப்பி ஓடிவிட்டனர். இன்னும் ஜோடான், துருக்கி போன்ற நாடுகளும் இப்பிரச்னையால் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில் பங்கு பெற வாய்ப்புள்ளது.

3. லெபனானில் இருக்கும் சூழ்நிலை சிரியாவிலும் ஏற்படுமா?
ஏற்படலாம், இரண்டு நாடுகளின் இனம் மற்றும் மதம் ஒன்றாக இருப்பதால் இவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்க இயலாது. ஆனால் ஆசாத் தனக்கு தோல்வி ஏற்படும் சூழ்நிலையில் நாட்டின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஒழிந்து கொள்வதால் மீண்டும் வந்து போரைத் தொடரலாம் என்றார்.

4. சிரியாவின் பிரச்னையினால் மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையே அதிகாரப் போராட்டம் ஏற்பட்டுள்ளதா?
ரஷ்யாவும் சீனாவும் ஆசாத்திற்கு ஆதரவாக இருக்கின்றது. அதே சமயம் மேலை நாடுகள் சிரியாவின் ராணுவப் படைக்கு ஆதரவாக உள்ளன. அதே வேளையில் ஈரான் ஆசாதின் ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்யக்கூடும்.

இதன் மூலமாக மத்திய தரை கடலின் கிழக்குப் பகுதி ஈரானுக்கு கிடைக்கும். இதனால் சில கீழை நாடுகள் ஓர் அணியிலும் மேலை நாடுகள் ஓர் அணியிலும் செயல்படுவதைக் காணமுடிகிறது.

5. ஈரானுடைய ஆதரவு ஆசாத்திற்கு எவ்வளவு இருக்கும்?
நூறு சதவிகிதம் இருக்கும் என்றார். மேலை நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதைப் போல ஈரான் சிரியாவின் ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்வதோடு மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்ப ரீதியாகவும் பேருதவிகளைப் புரிந்து வருகிறது. மேலும் ஈரான், ஈராக் அரசுடன் இணைந்தும் ஆசாத்திற்கு உதவி செய்கின்றது என்றார்.

6. மேலை நாடுகள் ஈரானை நேரடியாகத் தாக்க முயலாமல் சிரியாவைத் தாக்குவதன் மூலமாக ஈரானுக்கு தொல்லைக் கொடுக்கின்றதா?
ஷியா முஸ்லீம்களின் அதிகாரம் நிலவும் பகுதி ஈரான் தவிர இவர்கள் ஈராக்கிலும், பாலஸ்தீனம், லெபனான் பகுதியிலுள்ள ஹெஸ்பெல்லோ இயக்கமாகவும் காணப்படுகின்றனர். இந்த பிரச்னையில் வளைகுடா நாடுகள் துருக்கியோடு இணைந்து சன்னி முஸ்லீம்களுக்காக போரிட முன்வரும்.

அதே வேளையில் சிரியாவில் நடக்கும் போர் சன்னி, ஷியா முஸ்லீம்களுக்கு இடையிலான போராக உருவெடுப்பதையும் கிழக்கு, மேற்கு நாடுகளுக்கிடையிலான போராக நிறம் மாறுவதையும் காணமுடிகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]