| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| வரி ஏய்ப்புத் தீர்வுக்காக அமெரிக்க-சுவிஸ் ஒப்பந்தம் |
| [ வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 03:58.23 பி.ப GMT ] |
அமெரிக்காவில் அரசுக்கு வரி செலுத்தாமல் அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்த பணத்திற்கு வரியை வசூலிக்க அந்த நாட்டு வங்கிகளிடம் தனது நாட்டு வாடிக்கையாளரின் பெயர்ப்பட்டியலை அமெரிக்கா கேட்டுள்ளது.சுவிஸ்சர்லாந்து தற்போது இதற்கு ஒத்துக் கொண்டது. ஆரம்பத்தில் இவ்வாறு ரகசிய வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர்களை வெளியிடுவது கிரிமினல் குற்றமாகும் என்று சுவிஸ் அரசு மறுத்துவந்தது.
இப்போது அமெரிக்காவின் Facta என்ற வரிஏய்ப்புச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. அவ்வாறு இல்லையென்றால் வங்கிகள் அபராதம் கட்ட வேண்டுமென்று அமெரிக்கா சட்டம் இயற்றியிருந்தது.
இந்த வரி செலுத்துதல் குறித்த அமெரிக்க சுவிஸ் ஒப்பந்தத்திற்கு முழு வடிவம் தர இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் இந்தச் சட்டம் 2013 முதல் நடைமுறைக்கு வரும். சுவிஸ் அரசு தனது வங்கிகள் அமெரிக்க அதிகாரிகளோடு ஒத்துழைத்து வங்கிக்கணக்கு பற்றிய தகவல்களை வழங்கும். இதற்கு சுவிஸ் நாட்டுக் குற்றவியல் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்கான அரசுத்துறை, ஃபேக்டாவிடன் ஒத்துழைக்க மறுப்பதால் சுவிஸ்ஸின் நிதி நிலைமைக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுடன் ஒத்துழைக்காவிட்டால் சுவிஸ் வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களோடு அந்நிய நாடுகள் கொண்டிருக்கும் வணிகத் தொடர்புகள் துண்டிக்கப்படும். அப்போது உலகின் மிகப்பெரிய முதலீட்டுச் சந்தையான அமெரிக்காவிடம் இருந்து சுவிட்சர்லாந்து தனிமைப்படுத்தப்படும்.
அமெரிக்கரும், இந்த ஒப்பந்தம் குறித்து மனநிறைவு பெற்றுள்ளனர். சுவிட்சர்லாந்து அரசு சர்வதேச வரி ஏய்ப்பு நடவடிக்கையை எதிர்த்து வரியை வசூலிக்கத் தனது முழு ஒத்துழைப்பை நல்கி இவ் வசூலை உறுதிப்படுத்தியதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அமெரிக்காவின் வரி கொள்கைக்கான துணைச் செயலர் எமிலி மக்மேஹோன் பாராட்டினார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|