சுவிட்சர்லாந்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக நிதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.சிரியா கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் சுவிஸ்ஸில் தயாரான கையெறி குண்டுகள் இருப்பது செய்தித்தாள்களில் படமாக வெளிவந்தது. இதனை அறிந்த சுவிஸ் இனி அரபுநாடுகளுக்கு சுவிஸ்ஸிலிருந்து ஆயுத ஏற்றுமதி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
2003ம் ஆண்டில் ஐக்கிய அரபுநாடுகளுக்கு சுவிஸ் அனுப்பிய கையெறி குண்டுகள் நிறைந்த சரக்கு கப்பல் ஒன்று அங்கிருந்து சிரியாவிற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சுவிஸ் அரசு கருதுகிறது.
ஏனெனில் சிரியாவுக்கு கடந்த 1998ம் ஆண்டிற்கு பிறகு சுவிஸ் ஆயுதம் எதுவும் அனுப்பவில்லை. எனவே செய்தித்தாள்களில் வந்திருக்கும் கையெறிகுண்டுகள் சுவிட்சர்லாந்து அனுப்பியதாக இருக்க வாய்ப்பில்லை என சீகோ எனப்படும் பொருளாதார நடவடிக்கைக்கான அரசுத் துறை சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
சிரியாவின் போராளிகள், கையில் சுவிஸ் நாட்டு குண்டுகளை வைத்திருப்பதாக இரண்டு சுவிஸ் பத்திரிகைகள் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் சட்டத்துக்குப் புறம்பாக ஜுன் மாதத்தின் நடுவில் எடுக்கப்பட்டதாகும்.
சுவிஸ் அரசின் ருவாத் என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டில் 225,162 கையெறிகுண்டுகளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு அனுப்பியது உண்மைதான். இந்நிலையில் செய்தித்தாளில் வெளிவந்த படங்கள் எழுப்பிய சர்ச்சையில் இனி அரபு நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதில்லை என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சுவிஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டில் 25 PC-21 பிலேட்டஸ் பயிற்சி விமானங்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் ராணுவத் தளவாடங்களை சுவிஸ்ஸிடமிருந்து அரபுநாடுகளே வாங்கி வந்தன. இந்த விமானங்களுக்கான பராமரிப்புச் சேவையை சுவிஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் லிபியாவில் மம்மர் கடாபியை எதிர்த்துப் போராடிய மக்களின் கைகளில் சுவிஸ்ஸின் ஆயுதங்கள் இருப்பதாக செய்தி வெளிவந்தது. உடனே கத்தாருக்கு ஏற்றுமதி செய்த ஆயுதங்களை சுவிஸ் நிறுத்திவிட்டது.
பிறகு ஐந்து மாதங்கள் கழித்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் சபை, ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி குறித்து கருத்தரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஆயுத ஏற்றுமதி மற்றும் அவற்றை இடம் மாற்றுவது குறித்து விதிகள் வகுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. |