| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| கிறிஸ்டல்நாட் தேவை என இஸ்லாமியத்தை எதிர்த்த நபர் மீது அரசு குற்றவியல் விசாரணை |
| [ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 02:18.01 பி.ப GMT ] |
சமீபத்தில் “மீண்டும் ஒரு கிறிஸ்டல்நாட் தேவைப்படுகிறது” என்ற தமது கருத்தை சமூக வலைத்தளத்தில் மூலம் பதிவு செய்த ஜுரிச்சைச் சேர்ந்த நபர் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.அவரது பள்ளி நிர்வாகம், அவரை குழுவிலிருந்து வெளியேற்றியது. அவரை சார்ந்திருந்த சுவிஸ் மக்கள் கட்சியும், கட்சியை விட்டு விலக்கியது. அவரது இனப்பகை உணர்வுக்காக அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்தக் குற்றவியல் விசாரணை சமீபத்தில் அரசு தொடங்கியது. புதன்கிழமையன்று பத்திரிகையாளர் முன்பு தன் தவறை உணர்ந்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டார். தனது கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் கூறினார்.
முதலில் தான் அவ்வாறு பகிர்தளத்தில் எழுதவில்லை என்று மறுத்தவர் பின்பு பிரபல பத்திரிகை அவரது தவறை ஆதாரங்களுடன் நிரூபித்ததும் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டார். ஜுரிச் மக்கள் கட்சியின் தலைவரான ரோஜர் லீபி, இவரது கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், இவரைத் தமது கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.
பசுமைக் கட்சியின் இளைஞர் அமைப்பும் இஸ்லாமிய மத்தியக் குழுவும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தது. யூதர்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கிறிஸ்டல்நாட் என்பது உடைந்த கண்ணாடிகளின் இரவு என்று அழைக்கப்படும் ஒரு வன்முறைச் சம்பவம் நிறைந்த இரவாகும். அன்று சுமார் 100 யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. தெரு முழுக்க சன்னலின் கண்ணாடிச் சில்லுகள் சிதறிக் கிடந்தன.
இந்தச் சம்பவத்தை போன்று மசூதிகளை உடைக்க வேண்டும் என்ற தனது கருத்தில் இவர் பதிவு செய்திருந்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|