சமூக செய்தி
பணக்காரர்களின் வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் அதிகாரிகள்: வழக்கு தொடர்ந்த அமெரிக்கா
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:40.52 பி.ப GMT ]
சுவிஸ் வங்கியாளர் ஸ்டீபன் பக்கும்(Stefan Buck), சுவிஸ் சட்டதரனி எட்கார் பல்ட்சரும்(Edgar Paltzer) அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற அமெரிக்கப் பணக்காரர்கள் பலருக்கும் சதி செய்து உதவி செய்துள்ளனர்.

இதனால் அமெரிக்காவின் சட்டத்துறை, இவர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நியுயார்க் நகரில் பதிவானது.

இது குறித்து அமெரிக்க சட்டதரனி அலுவலகம் தனது ஊடகக் குறிப்பில், பால்ட்சரும், பக்கும் தமது தொழில் திறமையால் அமெரிக்க வாடிக்கையாளர்களை வரி செலுத்த விடாமல் அரசை ஏமாற்றி சதி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வரி ஏய்ப்புக்காக சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய வங்கியான UBS, அமெரிக்கச் சட்டத்துறைக்கு 780 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது.

இதேபோன்று சுவிட்சர்லாந்தின் மிகப்பழைய வங்கியான வெஜிலின்(Wegelin) நிறுவனம், வசதிபடைத்த அமெரிக்கர்களின் வரி ஏய்ப்புக்கு உதவியதற்காக 58 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது. ஆனால் பால்ட்சரும், பக்கும் இன்னும் கைது செய்யப்படவில்லை. 56 வயது பால்ட்சர் இரு நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். 32 வயது பக் சுவிஸ் குடிமகன் ஆவர்.

இருவரும் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் தான் வசிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை இவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீட்டில் பெரும் விருந்து ஏற்பாடு செய்த இளம்பெண்: பொலிசில் புகார் செய்த அக்கம்பக்கத்தினர்
அமெரிக்காவின் ‘டேர்டெவில்’ சாகச மனிதர் ஜோனி ஸ்ரான்ஞ் சுவிஸில் பரிதாப மரணம்! (வீடியோ இணைப்பு)
”உலகளவில் மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்”: சுவிஸ் தீர்மானத்தை ஏற்றது ஐ.நா சபை
மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் சுவிஸ்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
புகலிடம் கோருபவர்களை பதுங்கு குழிகளில் தங்க வைக்க ஏற்பாடு: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு
அப்பிள் பழங்களை பதப்படுத்தும்போது நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன்
சுவிஸ் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் "புலி" திரைப்படம்: ரசிகர்களே கண்டுகளியுங்கள்
சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்
பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தர்ஷிகா விளக்கம் (வீடியோ இணைப்பு)
உலக பொருளாதார தரவரிசை பட்டியலில் அமெரிக்கா, சிங்கப்பூரை ஓரங்கட்டிய சுவிட்சர்லாந்து
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சந்தியாகு அடைக்கலமுத்து
பிறந்த இடம்: யாழ். ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தூங்கிக்கொண்டு காரை ஓட்டிய வாலிபர்: நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்
[ திங்கட்கிழமை, 28 செப்ரெம்பர் 2015, 01:07.50 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை ஒன்றில் காரை ஓட்டிக்கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் திடீரென தூங்கியதால் எதிரே வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தின் குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்திட்டுள்ள பள்ளிக்குழந்தைகள்
[ திங்கட்கிழமை, 28 செப்ரெம்பர் 2015, 10:26.03 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் குடியுரிமை அடையாள அட்டையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் தமிழில் கையெழுத்து போட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வோக்ஸ்வேகன் காரை திருடி சென்ற 14 வயது சிறுவன்: நூதன முறையில் மடக்கி பிடித்த பொலிசார்
[ திங்கட்கிழமை, 28 செப்ரெம்பர் 2015, 07:51.04 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் வோக்ஸ்வேகன் காரை திருடி சென்ற 14 வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு நபர்களை அதிநவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர். [மேலும்]
சுவிஸில் பயங்கரம்: மரத்தில் மோதிய வேகத்தில் காருடன் எரிந்து பரிதாபமாக பலியான 5 நபர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 செப்ரெம்பர் 2015, 02:37.22 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலாவிற்கு சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 நபர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சாலை விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்கள்: உயிருக்கு போராடும் 3 இளைஞர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 செப்ரெம்பர் 2015, 10:22.37 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு கார்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயமடைந்த 3 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]